14th February 2021 21:21:14 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய எம்டிவி எம்பிசி நிறுவத்தின் “சிரச” ஊடக வலையமைப்பினரால் “சிரச நிவச” எனும் திட்டத்தின் கீழ் தலாத்துஓயா நுகலியெத்த பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பத்திற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 1 ஆவது பொறியியலாளர் சேவை படையணி மற்றும் இலங்கை ரைப்பில் படையணியின் படையினரால் புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன அவர்களின் வழிக்காட்டலில் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் படையினரின் சிரம ஒத்துழைப்புடன் சிரச நிவச திட்டத்தின் நிதி மூலம் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது. சனிக்கிழமை 13 ம் திகதி 111 ஆவது பிரிகேட்டிள் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் தலைவி திருமதி நீத்ரா வீரசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு வீட்டை திறந்து வைத்தனர். . இந் நிகழ்விற்கு சிரச நிவச திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
வறுமை கோட்டின் கீழ் வாழும் திருமதி கே.ஏ. பிரியங்கிகாவின் நிலைமையை கருத்திற்கொண்டு இராணுவத் தளபதியிடம் இக் கட்டுமான தேவை முன்வைக்கப்பட்டது.
மத சம்பிரதாய முறைக்கு ஏற்ப பிரதம அதிதியினால் சுப நேரத்தில் மங்கள விளக்கேற்றப்பட்டது. இதன் போது பயனாளிகளும் அவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் 'சிரச' ஊடக வலையமைப்பின் அதிகாரிகள், இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி, 11 ஆவது படைப்பிரிவு மற்றும் 111 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், பயனாளியின் உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் இணைந்திருந்தனர். இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அண்மைய காலங்களில் நிதியுதவியாளர்களால் இதுபோன்ற பல குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பரிசளித்துள்ளனர். Sports Shoes | Air Jordan