Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 16:21:14 Hours

கிழக்கு அதிகாரிகளுக்கு முன்னோக்கிய மூலோபாய திட்டம் பற்றிய அறிவு

சனிக்கிழமையன்று (13) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ முன்னோக்கு மூலோபாயம் 2020-2025 செயல் திட்டத்தை குறித்த விரிவுரை நடாத்தப்பட்டது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹெராத் மற்றும் கர்னல் பந்துல கொடிப்பிலி, இராணுவ தலைமையகத்தின் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவின் லெப்டினன்ட் கேணல் வேணுர திசாநாயக்க ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் உபாலி குணசேகர, மதுறு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் அனில் தர்மசிறி, பிரிகேட் தளபதிகள், 22, 23 மற்றும் 24 படைப்பிரிவுகள் மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள அமைப்புக்களின் சிரேஸ்ட அதிகாரிகள் அமர்வில் கலந்து கொண்டனர். Nike sneakers | Nike Shoes