17th February 2021 19:46:22 Hours
மிக உயர் மட்டத்தில் எல்லா நேரத்திலும் தயார்படுத்தல், சிறந்த இறுதி முடிவுகளுக்கான ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவது, துரித மீட்பு நடவடிக்கைகள் ,தற்காலிக நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, அர்ப்பணிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, படையினரால் நிரூபிக்கப்பட்ட துணிச்சல் மடுல்சீமையில் காணாமல் போன ஒருவரைத் தேடும் மிகச் சமீபத்திய சாகச நடவடிக்கை, ஆகிய வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு பாராட்டை பெற்ற விசேட படையணியின் வீரர்களுக்கு இன்று காலை (15) ஆம் திகதி பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் இராணுவ தலைமையகத்தில் வைத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைக்கப்பட்டன.
"நீங்கள் உங்கள் படைக்கு திரும்பியதும் துணிச்சல் மற்றும் மீட்பு அலகுகளின் சங்கிலியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், தேவையான அனைத்தும் உங்கள் சொந்த கையெழுத்தில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் உங்களுக்குப் பிறகு இராணுவத்தில் இணைபவர்களுக்கு ஆபத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்கள் மற்றும் நீங்கள் செய்த சாதனைகளைப் பற்றி அறிவூட்டுவதோடு மட்டுமல்லாமல், முழு செயல்பாட்டோடு தொடர்புடைய குறைபாடுகள், தவறுகள் மற்றும் அனுபவங்களை சரி செய்யவும் உதவும். இந்த பாராட்டு நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் விசேட படையணியின் படையினர்கள் உரிய நேரத்தில் எந்த சவாலையும் எடுக்கத் தயாராக செயற்பட்டதால் ஒப்பிடமுடியாத உன்னதமான அர்ப்பணிப்பு, எடுத்துக்காட்டுகளுக்கு கிடைத்தவை. 15 உறுப்பினர்களுடன் விசேட படையணியின் விசேட பிரிகேட் படைப் தளபதி பிரிகேடியர் துசார மகாலகமகே மற்றும் 4 ஆவது விசேட படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி. எச். அமித் ஆகியோர் இராணுவ தளபதி அவர்களின் அழைப்பை ஏற்று கலந்துகொண்டதுடன் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பாராட்டையும் பெற்றுக்கொண்டனர்.
அதே சந்தர்ப்பத்தில், ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் முழு நடவடிக்கை தொடர்பான வீடியோ ஒன்றையும் பார்வையிட்டார். காணாமல் போன 35 வயதுடைய நபரை தேடி 1200 அடி ஆழத்தில் இருண்ட மூடுபனி, குளிர் மற்றும் காற்று வீசும் வானிலை முறைகள் இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக கீழே செல்ல படையினர் எவ்வாறு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதையும் பார்வையிட்டார். அதன் போது இராணுவ தளபதி இராணுவ தலைமையக அலுவலகத்தில் வைத்து ஒவ்வொரு சிப்பாய் மற்றும் அதிகாரிகளுக்கும் கலந்துரையாடல் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவர்களுக்கு பாராட்டு கடிதம் மற்றும் பாராட்டுச் சின்னத்தையும் வழங்கினார்.
112 ஆவது பிரிகேட் மற்றும் விசேட படையணியின் படையினர் சனிக்கிழமை (6) ஆம் திகதி 11 நபர்களுடன் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு தடம் தவறிய திரு தினுர விஜேசுந்தர அவர்களின் உடலை செவ்வாய்க்கிழமை (9) சுமார் 1200 அடி பள்ளத்தில் இருந்து மீட்டனர். இதன் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரன, 112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க மற்றும் விஷேட படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார மஹாலேகமகே உட்பட கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து 65 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த முழு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Buy Kicks | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News