Header

Sri Lanka Army

Defender of the Nation

16th February 2021 08:00:20 Hours

தொலைக்காட்சி அலைவரிசையின் நிதியுதவியுடன் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திறந்துவைப்பு

பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப்பிரிவின் 8 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரின் மனித வளம் மற்றும் தொழிநுட்பத்துடன் சிரச தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து இரத்னபுரி பல்லேபெத்த பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டைக் நிர்மாணித்தனர்.

சிரச நிவச எனும் திட்டத்தின் நிதியுதவியனால் இந்த நிர்மாண பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்களினால் படையினரைக் கொண்டு மேற் கொள்ளப்பட்டது. சனிக்கிழமை (13) வீட்டை பயனாளிக்கு வழங்கும் நிகழ்விற்கு 61வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிஹேவகே எம்டிவி மற்றும் எம்பிசி வலையமைப்பின் தலைவர் திருமதி நீத்ரா வீரசிங்க அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் திட்டத்தின் நிதியுதவியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானத்தில் வாழும் திருமதி மல்லிகா தில்ருக்ஷியின் நிலையை கருத்திற்கொண்டு 'சிரசநிவச' திட்டம் இராணுவத் தளபதியிடம் இராணுவ மனிதவளம் மற்றும் தொழிநுட்ப உதவியினை இராணுவ தளபதியிடம் கோரியமைக்கு அமைவாக வீடு நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத சம்பிரதாய முறைக்களுக்கு ஏற்ப அன்றைய பிரதம அதிதிகளால் சுபநேரத்தில் மங்கள விளக்கேற்றல் பால் பொங்குதல் ஆகியன, பயனாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.

'சிரச ஊடக வலையமைப்பின் அதிகாரிகள், 8 ஆவது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி, 61வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் அன்றைய நிகழ்வில் பங்குபற்றிருந்தனர். இந்நிறுவனம் இராணுவத்துடன் இணைந்து சமீபத்திய காலங்களிலிருந்து இதுபோன்ற தகுதியான குடும்பங்களுக்கு புதிய வீடுகள் பலவற்றை பரிசளித்துள்ளனர். spy offers | Sneakers Nike Shoes