15th February 2021 12:58:22 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மீமுர் கைகாவல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட பாடசாலை விளையாட்டு மைதானத்தின் மீள் புனரமைப்பு பணிகள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவ பொறியியலாளர் படையினரால் ஆரம்பிக்கப்பட்டன.
இப் பணியானது (13) ஆம் திகதி சனிக்கிழமை மீமூரில் 'கம சமக பிலிசந்தர' என்ற நிகழ்வின் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் நிமித்தம் மேற்கண்ட பணியை முன்னெடுக்க இலங்கை இராணுவத்திற்கு வேண்டுகோள் விடுத்தார் அதன் பிரகாரம் பாடசாலையின் தேவையை கருத்திற்கொண்டு இராணுவத்தினரால் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைவரின் அபிலாஷைகள் நிறைவேற்றுமாறு அங்குள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதன்படி, ஜனாதிபதி அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்களின் வழிக்காட்டலின் பிரகாரம் படையினரால் அடுத்த 10 மணிநேரத்திற்குள் (14) ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. பொறியியலாளர் பிரகேட் கீழ் இங்கும் 6 ஆவது கள பொறியியலாளர் படையினரால் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இந்த திட்டம் இராணுவ இயந்திரங்களின் உதவியுடன் முடிக்கப்பட உள்ளது. Best jordan Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%