16th February 2021 18:22:38 Hours
கொவிட் - 19 தொற்றுநோய் பரவலை விரைவாக ஒழித்துக்கட்ட வேண்டியும் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ சுகாதார அமைச்சர், சுகாதார துறையின் அதிகாரிகள், முப்பைடையினர், மகா சங்கத்தினர் ஆகியோருக்கு ஆசிர்வாதம் வேண்டி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஏற்பாடு செய்ய்பட்ட விஷேட பூஜை வழிபாடுகள் சோமாவதிய மகா விகாரையில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலருடைய பங்கேற்புடன் 13 ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டு நிகழ்வின் போது சோமாவதிய விகாரையின் வளாகத்தின் இடம்பெற்ற ஊர்வளத்தில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை உடையணிந்து மூலிகை வகைகளினால் ஆன சாத்துதல்களை ஏந்திச் சென்றதுடன், புனித ஸ்தூபியை வளம் வந்த பின்னர் விஷேட வழிபாட்டு பூஜைகள் ஆரம்பம் ஆகின. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் புத்தரின் பல்லின சரியான சிற்பத்தை உள்ளடக்கியதாக இந்த தூபி கட்டமைக்கப்பட்ட இந்த புராதன தூபிக்கு பூஜைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவால் அழைப்பு விடுக்கப்பட்ட வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக தேரர், சோமாவதிய ராஜ மகா விகாரையில் பூஜை நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
பின்னர் மகா சங்கத்தினாரால் ஆகம சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டதுடன், கொவிட் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட சகலருடைய முயற்சிகளும் பாராட்டப்பட்டன. மேலும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டபடி சுகாதார வழிகாட்டுதல்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த அச்சுறுத்தலை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்காக. பண்டைய 'சூத்திர' நாளேடுகளின் பல அரிய மந்திரங்களை உச்சரிக்கும் சிறப்பு பூஜை நாட்டிற்கும் அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், கௌரவ சுகாதார அமைச்சர், சுகாதார துறையின் அதிகாரிகள், முப்பைடையினர், மகா சங்கத்தினர் ஆகியோருக்கும் ஆசிர்வாதம் வேண்டி மக்களைக் காப்பாற்ற தேவையான வலிமை, ஞானம் மற்றும் வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென கோரியும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
நெல்லிகல சர்வதேச பௌத்த மத்தியஸ்தானத்தின் இந்த நிகழ்வு சிறப்பு ஏற்பாடுகள் வண. வத்துகும்புரே தம்மரத்தன தேரர் உள்ளிட்ட பலரும் இந்த பூஜைகளிலும் பங்கெடுத்தனர். இந்த தூபியின் கட்டுமானத்திற்கு காவந்தீச மன்னனின் சகோதரியும், இளவரசர் கிரி அபவின் மனைவியுமான சோமாவதி இளவரசியின் பின்னர் ஸ்தூபம் என பெயர் சூட்டப்பட்டிருப்பதோடு, இந்த தூபியானது இளவரசரினால் அரஹத் மஹிந்தவிடமிருந்து பெறப்பட்ட அதிசியங்களைக்கொண்டு புத்தரின் நினைவுச்சின்னத்தை பிரகாசப்படுத்துவதற்கு பிரம்மாண்டமாக கட்டியெழுப்பபட்டது எனவும் நம்பப்படுகிறது. affiliate tracking url | Men's Footwear