Header

Sri Lanka Army

Defender of the Nation

12th February 2021 21:07:03 Hours

படைவீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மேலும் மூன்று புதிய வீடுகள் வழங்கிவைப்பு

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவின் கீழ், காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகமானது தனது நிதி மற்றும் படைவீர்ர்கள் அலுவலக பணிப்பகத்தின் நிதியுதவியின் மூலம் முன்னெடுத்துவருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் உடுவின்ன, ஹங்குரங்கெத்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளியான ஆணைபெறாத அதிகாரிக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டினர். குறித்த வீடானது இலங்கை இலேசாயுத படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில், ரூ .1.4 மீ செலவில் கட்டப்பட்ட இந்த புதிய வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி தளபதி அவர்கள் கலந்துகொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.

இதற்கிடையில், இதேபோன்ற செலவில் அம்பகாமத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரை தியாகம் செய்த உயிர்நீத்த போர்வீரனின் குடும்பத்திற்காக இப்பாகமுவவில் மேலும் ஒரு வீடு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டதுடன் இதற்கான நிதி அனுசரணையானது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் மற்றும் படைவீர்ர்கள் அலுவலக பணிப்பகம் ஆகியவற்றினால் வழங்கப்பட்டது.

20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பை ஏற்று இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் பி.ஜே.பி கமகே பிரதம அதிதியாக 10 ஆம் திகதி கலந்துகொண்டு அவ்வீட்டினை திறந்துவைத்தார்.

வாரியபொலவிலுள்ள 11வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியைச் சேர்ந்த ஆணைபெறாத அதிகாரிக்கு ரூ .1.4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு புதிய வீடு புதன்கிழமை (10) புதன்கிழமை திறக்கப்பட்டது.

11வது வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பை ஏற்று இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் பி.ஜே.பி கமகே பிரதம அதிதியாக 10 ஆம் திகதி கலந்துகொண்டு அவ்வீட்டினை திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கிராமவாசிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்துகொண்டனர். bridge media | Womens Shoes Footwear & Shoes Online