Header

Sri Lanka Army

Defender of the Nation

12th February 2021 15:00:03 Hours

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான தயார்படுத்தல் பயிற்சிகள் ஆரம்பம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவ தலைமையகத்தின், பணி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் ஹர்மடான் -3 கள பயிற்சிகள் நேற்று (12) யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் ஆரம்பமானது. இந்த ஐந்துநாள் பயிற்சிகள் யாழ்ப்பாணத்திலிருந்து மின்னேரியா வரையிலான 457.2 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்னெடுக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளின் போது மாலி மற்றும் காவோ பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் அத்தியாவசிய போக்குவரத்து சேவைக்கு அவசியமான வாகன அணிவகுப்புகு, பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவை என்பவற்றை முன்னெடுப்பதற்காக செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கிலேயே இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப கள பயிற்சியில் கஜபா படையணி, இலங்கை படைக்கலச் சிறப்பணி, சமிக்ஞை படையணி, இயந்திரவியல் படையணி,பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இராணுவ வைத்தியப்படையணி, இலங்கை உபகரணப் படையணி, இலங்கை மின்னியல் மற்றும் பொறியியல் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொதுச் சேவைப் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி 20 அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் 223 பேரும் கலந்துக்கொண்டனர்.

கவச வாகனங்கள் 06, யுனி பபள் ரக வாகனங்கள் 06, பொருள்கள் விநியோகத்துக்கான 19 வாகனங்கள் உள்ளட்டங்களாக 47 இராணுவ வாகனங்கள் இந்த களப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஹர்மடான் களப் பயிற்சிக்கான வாகனங்கள், மயிலிட்டி, பருத்தித்துறை, நகர்கோவில்,வெத்தலகேணி, பரந்தன் விஸ்வமடு, புதுகுடியிருப்பு, முல்லைத்தீவு, நாயாறு,வெலிஓயா,பதவிய, புல்மோட்டை, தாவல் குளம்,கோமரன்கடவல, திருகோணமலை, கிண்ணியா, மூதுர் சேறுநுவர, கந்தகாடு ,புலதிசிகம,பொலன்னறுவை,கிரிதளை ஊடாக 16 ஆம் திகதி மின்னேரியா காலாட் படை பயிற்சிப் மையத்தை சென்றயும். பயிற்சிகளின் ஆரம்பகட்ட நிகழ்வுகளில் 58 வது படைப்பிரிவின் படைத் தளபதியும் ஹர்மடான்-3 கள பயிற்சிகளின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் 62 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியும் ஹர்மடான் கள பயிற்சிகளின் பிரதி பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லவும் கலந்துகொண்டார்.

இந்த ஹர்மடான்-3 கள பயிற்சிகளில் 12 படையணிகள் கலந்துகொள்வதுடன் மாலி மற்றும்கோவா ஆகிய பகுதிகளில் ஏற்படும் சவால்கள் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடுவர்.அமைதிகாக்கும் படைக்குழுவின் கட்டளைத் தளபதியாக லெப்டினன் கேணல், பீ.ஏ.டி.என்.கே.புலத்சிங்களவும் , இரண்டாவது கட்டளை தளபதியாக மேஜர் லசந்த உடுகெதர ஆகியோர் செயற்படுகின்றனர்.

திட்டத்தின் குறித்த பயிற்சிகள் வடக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கி காணப்படுவதுடன் ஏற்கனவே ஐ.நா. அமைதிகாக்கும் பணியிலுள்ள படையினர் அவர்களின் ஒரு வருட காலத்தை பூர்த்திசெய்து இந்த வருடம் நாடு திரும்பவுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக இந்த புதிய அமைதிகாக்கும் படையினர் தங்களது கடமைகளை பொறுப்பேற்பர். இலங்கை இராணுவமானது ஐ.நா. அமைதிகாக்கும் செயல்பாடுகளுக்கு பங்களிக்கும்அமைப்பாக ) உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதன் மூன்றாவது குழுவான 243 படையினரை உள்ளடக்கிய அமைதிகாக்கும் குழு நோக்குநிலைப் பயிற்சிகளுக்குப் பிறகு, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு அனுப்பப்படவுள்ளது. Asics shoes | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ