12th February 2021 20:04:49 Hours
தீவு முழுவதும் அனைத்து பிரதேச செயலகங்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களையும் (SFHQ) உள்ளடக்கிய சாதாரண சிப்பாய்கள் மற்றும் தொழில்சார் சிப்பாய்கள் இணைத்துக் கொள்ளும் இராணுவ ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் மூன்று மாத கால திட்டம் அறிவிக்கப்பட்டு முதல் சில வாரங்களில் இதுவரை சில ஆயிரம் பேர் இணைந்துக் கொண்டுள்ளனர்.
தொழிற்துறை மற்றும் பொது கடமைத் துறைகளில் தற்போதுள்ள வெற்றியிடங்களை நிரப்புவதற்காக பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான ஆற்றல் மற்றும் உடல் ரீதியான வலுவான இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் இராணுவத்தின் ஆட்சேர்ப்பு பணிப்பகம் ஒவ்வொரு பாதுகாப்பு படை தலைமையகத்திலும் (SFHQ) பிரிகேடியர் பொது பணியின் மேற்பார்வையின் கீழ் தனித்தனியாக ஆட்சேர்ப்பு சபைகளை நிறுவியுள்ளது.
அதன்படி, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் கர்ணல் ஷிரோன் மொல்லிகொட ஆட்சேர்ப்பு பணிப்பகத்துடன் தொடர்புடைய பல நடைமுறை சிக்கல்களை தீர்த்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருந்தார். பிராந்திய மட்டங்களில் திறனான இளைஞர்கள் வளத்தை அமைப்புக்கு இணைப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது மூன்று இளைஞர்களை இணைத்து கொள்வதற்காக வசிப்பிடங்களுக்கு அருகில்சென்று இணைக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இராணுவத்தில் சேர விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு வயதெல்லைகள், கல்வி தகமைகள், தகமைகள், சம்பள விபரங்கள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள், வைத்திய வசதிகள் மற்றும் ஏனைய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ஆவணங்களுடனும் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு நேரடியாக சென்று ஆட்சேர்ப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்
பாதுகாப்பு படைத் தலைமையகம்- யாழ்ப்பாணம் - 011 4056102/076 5303715
பாதுகாப்பு படைத் தலைமையகம்- வன்னி (வவுனியா) - 076 6907293
பாதுகாப்பு படைத் தலைமையகம்- கிழக்கு(வெலிகந்தை) - 027 2259128/076 6907297
பாதுகாப்பு படைத் தலைமையகம்- கிளிநொச்சி - 076 4514395/070 1918333
பாதுகாப்பு படைத் தலைமையகம்- முல்லைத்தீவு - 071 2138268
பாதுகாப்பு படைத் தலைமையகம்- மேற்கு - 076 5303721
பாதுகாப்பு படைத் தலைமையகம்- மத்திய (தியதலாவ ) - 076 6907304 / 0765303719
ஆடசேர்ப்பு பணிப்பகம் (கொஹுவலை ) - 011 2815080 / 011 3137553 Asics shoes | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret