11th February 2021 22:08:46 Hours
கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு அமர்வு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சுகாதார அமைச்சின் செயளாளர் மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்க , பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் பரவலை தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை (11) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, சில நாட்களுக்கு முன்பு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் நியமிக்கப்பட்ட சுதந்திர நிபுணர் குழுவின் இலங்கையின் தற்போதைய கொவிட் – 19 தடுப்பு உத்திகள் தொடர்பான இடைக்கால அறிக்கை விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மீளாய்வு செயன்முறை, அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள், தற்போதுள்ள மூலோபாய திட்டத்தில் முன்மொழியப்பட்ட மேம்பாடுகள், நாடளாவிய ஒருங்கிணைப்பு, திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்து முடிவெடுக்கும் செயல்முறை, தகவல் மற்றும் தரவு முகாமைத்துவம் அதன் பகிர்வு, தகவல்தொடர்பு, பரிசோதனை மூலோபாயம், மருத்துவ முகாமைத்துவம் , வைத்தியசாலைகளின் பின்னடைவு, தற்போதைய தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டன.
மாகாண, மாவட்ட ரீதியிலான குழுக்கள், பணிப்பங்களின் பிரதிநிதிகள்,தொழில்நுட்பக்குழு தலைவர்கள், சுகாதார அமைச்சின் ஆலோசகர்கள் ஆகியோருடன் இந்த சந்திப்பில் கொவிட் - 19 தொடர்பில் தொடர்ச்சியாக ஆலோசிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட மாற்றங்களினை அடிப்படையாக கொண்டு பின்வரும் முக்கிய நான்கு விடயங்கள் பற்றியும், ஒன்றிணைந்த தீர்மானம் எடுக்கும் பொறிமுறை, வெளிப்படையான நேரடி மற்றும் ஏனைய தகவல் தொடர்புகள் கூட்டு செயல்பாட்டு ஒருங்கிணைப்பும் நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊழியர் எண்ணிக்கையில் இயல்பு நிலைமையை எட்டும் வகையில் ஒரு யதார்த்தமான முறையை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், பரிசோதனை மாதிரிகள், நடைமுறைத் தகவல்கள், உலகளாவிய நிலைமைகள், பகுப்பாய்வு மற்றும் உலகளாவிய சான்றுகளின் தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை, தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல், இடைநிலை பராமரிப்பு மற்றும் விரிவான மருத்துவ பராமரிப்பு தொடர்பான முடிவுகள் தொடர்பாக கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. கட்டுப்பாட்டு மற்றும் முகாமைத்துவ உத்திகள் நாட்டில் முன்னறிவிக்கப்பட்ட தொற்று நோய் எதிரான சாத்தியமான வள எல்லைகள் குறிப்பாக பணிக்குழுவின் கடும் வேலைப்பளு என்பன தொடர்பிலும் கருத்தில் கொள்ளப்பட்டது.
குழுவில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு பிராந்தியத்தின் கொவிட் 19 க்கான சிறப்பு ஆலோசகரும் பொது சுகாதார நிபுணருமான டாக்டர் பாலிதா அபேகோன், இங்கிலாந்து கீல் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவப் பீடத்தின் பேராசிரியரும் கண்டி தேசிய அடிப்படை கற்கை நிறுதைதின் தலைவருமான பேராசிரியர் அதுல சுமதிபால, இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் டாக்டர் நிஹால் அபேசிங்ஹ, டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இலங்கை வைத்தியர்கள் கல்லூரி தலைவர் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க , கொழும்பு பல்கலைக்கழக சமூக மருத்துவ பீட பேராசிரியரும் மைக்ரோ உயிரியலாளர்கள் கல்லூரி தலைவருமான டாக்டர் ஷிராணி சந்திரசிரி, ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீட பேராசிரியர் நீலிகா மலவிவிகே, ராஜரட்டா பல்கலைக்கழக சமூக அறிவியல் பீட பேராசிரியர் சுன்னத் அகம்போடி மற்றும் சமூக வைத்திய நிபுணரும் இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மன நல சேவைகள் பிரதி பணிப்பாளருமான கர்னல் (டாக்டர்) சவீன் சேமகே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அங்கு பின்வருவன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடு மட்ட ஒருங்கிணைப்பு திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு, தகவல், தரவு முகாமைத்துவம் மற்றும் பகிர்வு, கண்காணிப்பு, விரைவு நடவடிக்கை குழுக்கள், சோதனை உத்தி, மருத்துவ முகாமை, இடர் தொடர்புகள், தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் அறை ஊடகங்களின் பங்கு, முதன்மை ஊழியர்கள், மனநலம் மற்றும் மக்களின் நல்வாழ்வு, பிரச்சினைகள், திருப்பி அனுப்புவதற்கான உத்தி, கல்வித்துறையின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையின் பிரச்சினைகள்.
இந்த சுயாதீன நிர்வாகக் குழு 20 ஜனவரி 2021 திகதியிடப்பட்ட கடிதத்தின் படி கொவிட் தடுப்பு செயலணியினால் தற்போது பயன்படுத்தப்பட்ட உத்திகளை மறுபரிசீலனை செய்யவும் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கும் முன்னோக்கு மூலோபாயத்திற்கான பரிந்துரைகளை வகுப்பதற்கும் நிறிவப்பட்டதாகும். . best Running shoes brand | Nike Air Max 270