15th February 2021 18:27:49 Hours
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (10) நடைப்பெற்ற 2020 ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விருது வழங்கல் விழாவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'லீடர்ஷிப் வித் டிஸ்டிங்க்ஷன்' (மேம்பாட்டிற்கான தலைமைவம்) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கையின் சர்வதேச வர்த்தக சபை, இலங்கை பட்டய நிதி முகாமையாளர் நிறுவனம் மற்றும் டெய்லி பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துக் கொண்டார். சிறப்பு அதிதியாக இந்திய துணை உயர் ஸ்தானிகர் மேன்மைதாங்கிய வினோத் கே ஜேக்கப் கலந்துக்கொண்டதுடன். இதன்போது இந்திய பொஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் பணிப்பாளர் திரு அல்பேஷ் ஷா சிறப்புரையில் கொவிட் – 19 பரவாலால் வணிகச் செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி கருத்துரைத்தார்.
கொவிட் - 19 தடுப்புக்கான வழிக்காட்டல்களை முறையாக பின்பற்றி நடத்தப்பட்ட இந்த விழாவில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினருடைய உரைகளும் இடம்பெற்றிருந்துடன் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையடுத்து (CIMA) சிமா நிறுவனத்தின்இலங்கை பிரதானியால் வீடியோ தொழில்நுட்பம் மூலமான உரையொன்று நிகழ்த்தப்பட்டதுடன், ஐ.சி.சி.எஸ்.எல் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் (CIMA) சிமா நிறுவனத்தின் தலைவர் ஆகியோரின் வீடியோ உரைகளும் இடம் பெற்றன. அதனை தொடர்ந்து நடுவர்களால் விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து "இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவன விருது வழங்கல் விழா -2020 இல் தெரிவு செய்யப்பட்ட 10 நிறுவனங்களுக்கான விருதுகளை வழங்கி வைக்கதற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத்தின் 2020 – 2025 வரையான ஐந்தாண்டு திட்டத்தை ஆராய்வதன் ஊடாக தனியார் வியாபார நிறுவனங்கள் தங்களது தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான வழிக்காட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்காட்டினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவுல் அவர்களின் வீடியோ உரை காட்சிப்படுத்தப்பட்டது. அவ்வுரையில் தலைமைத்துவ என்பது மனிதத்துவத்தினை அடிப்படையாக கொண்டது எனவும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பதாகும் என குறிப்பிட்டிருந்தார். தனக்கு கீழ் பணியாற்றுபவர்களின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பாக அறிந்திருத்தல் அவசியம் என்றும் உயர் ஒழுக்கமே நிறுவனத்தின் தரத்தை பிரதிபலிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதன் போது ஜெனரல் ஷவேந்திர சிலாவின் தலைமைத்துவ பண்புகள், கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்கான செயலணியின் தலைவராக அவருடைய ஆற்றல் மிக்கதும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடியதுமான பாத்திரங்கள் என்பனவற்றை பாராட்டும் வகையில் கைத்தட்டல்கள், பாராட்டுக்களுக்கு மத்தியில் அவருக்கான கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.
அதே சந்தர்ப்பத்தில் ஐ.டி.எச் வைத்தியசாலையின் வைத்தியர்கள் . ஊழியர்கள் மற்றும் திருமதி அபான் பெஸ்டன்ஜி ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதுடன், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் உரை கீழ்வருமாறு,
2020ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் நிறுவனங்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2020ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான விருதுகளை பெற்ற நிறுவனங்களுக்கு வாழ்த்துகிறேன். பல தடங்கல்களுக்கு மத்தியில் 3 வது முறையாக இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததமைக்காக சர்வதேச வர்த்தக சபை, இலங்கை நிதி முகாமைத்துவ நிறுவனம் மற்றும் டெய்லி பைனான்ஸ் டைம்ஸ் ஆகியவற்றையும் பாராட்டுகிறேன்.
வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அவர்கள் உருவாக்கிய மதிப்பு உட்பட வணிகத்தில் சிறந்து விளங்கிய அமைப்புகளை அங்கீகரிப்பதற்கான இந்த நிகழ்வுகள் வரவேற்கத்தக்கவை. மேலும் இது இந்த நாட்டின் முழு வணிகத் துறையினருக்கும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் நம்புகிறேன்.
கொவிட் – பரவல் காரணமாக வணிகத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் முழு உலகையும் மோசமாக பாதித்த மற்றும் சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான சமூக-பொருளாதார சிக்கல் என இதனை குறிப்பிடலாம். இதனால் இலங்கை பொருளாதாரமும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது முக்கியமாக சுற்றுலா வர்த்தகம், ஆடைத் தொழில் மற்றும் விவசாய ஏற்றுமதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டின் போது இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வீழ்ச்சி அடையாமல் பாதுகாப்பதற்கான முயற்சியை நீங்கள் இடைவிடாமல் எடுத்துள்ளீர்கள். எனவே,கொவிட் - 19 தொற்றுநோயைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
புதிய இயல்பான வாய்ப்புகளுடன் அரசாங்கம் சாதகமான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் வணிகங்களை ஊக்குவிப்பதற்கும் பல முக்கியமான முயற்சிகளையும் கொள்கைகளையும் வகுத்துள்ளது கொவிட் - 19 தாக்கங்களிலிருந்து கற்றுக்கொண்டவை ஊடாக புதிய வாய்ப்புகள் உள்ளூர் வணிக வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவை மட்டுப்படுத்திக்கொள்ள முடியும். ஏற்றுமதியின் மதிப்பை அதிகரித்தல், இறுதி உற்பத்திகளை அதிகரித்தல், ஏற்றுமதியை பன்முகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு நகர்வது, திறனுக்கான வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், மற்றும் அறிவியல் அடிப்படையிலான மனித மூலதனம், உள்நாட்டு உணவு தயாரிப்பு திறனை அதிகரித்தல் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
மேலும், வாழ்க்கை முறை, விநியோகச் சங்கிலி, சுற்றுலா ,தகவல் மற்றும் தரவு முகாமைத்துவம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் வணிக களத்தில் பல தொடர்புடைய மாற்றங்களைக் கொண்டிருக்கும் மேலும் முன்பைப் போல அதிக வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும், வணிகத் துறை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. மேலும், பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்று நிலவும் பாதுகாப்பான சூழலின் கீழ், இலங்கையின் வணிக துறைகள் மற்ற நாட்டவர்களை விட ஒரு இலக்கை பெறவும், அவர்களின் சந்தை பங்கை அதிகரிக்கவும், பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும் உதவும். எனவே இன்றைய வணிக வாய்ப்புகளை நேர்மறையான மனதுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி தங்கள் திறன்களை வலுப்படுத்தவும் வர்த்தகங்களை சர்வதேசமயமாக்கவும் அவசியமான கருவிகள் எந்தவொரு சிக்கலில் இருந்து மீளவும் இது உதவுகிறது.
கொவிட் - 19 நிலைமைக்கு மத்தியில், நாம் எங்கு நிற்கிறோம், எங்கள் வர்த்தகங்கள் எவ்வாறு பின்வாங்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தன என்று நம்புகிறேன். எனவே, நிறுவனங்கள் பலவீனங்கள் மற்றும் பலங்கள் , முன்னேற்றத்திற்கான பகுதிகளை மதிப்பீடு செய்து அடையாளம் காணலாம், பின்னர் வணிக செயல்திறனை மேம்படுத்த ஒரு முறையான அணுகுமுறை பின்பற்றலாம்.
வணிகத்தை சீரமைத்து நிறுவனத்தின் தற்போதைய தரத்துடன் குறிக்கோள்களை அடைய முன்னோக்கி செல்ல குறைந்தபட்சம் ஐந்து வருட மூலோபாயம் திட்டம் அவசியம், இதனால் ஒவ்வொரு ஆண்டும் அடைய வேண்டிய தரநிலைகள் மற்றும் நிறுவனத்தில் தேவையான மாற்றங்கள் தொடர்பில் தீர்மானிக்க முடியும். எங்கள் இராணுவம் மிகவும் பயனுள்ள ‘முன்னோக்கு வழிமுறைக்கான 2020-2025’ திட்டமொன்றை கொண்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா சரியாக மதிப்பிடப்பட்டுள்ளதால் வணிக பங்காளிகள் நுகர்வோர் மற்றும் இலாபத்தைத் தவிர ஊழியர்களைக் கவனித்தல் கருத்தில் கொள்வது ஒரு நிறுவனம் எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது என்பதை அளவிடுவதற்கான முக்கியமான மைல்கல்ளாகும். எனவே, இந்த பாராட்டுக்கள் நிறுவனங்கள் வணிக அரங்கில் நம்பகமானவர்கள் என்பதை கண்டறியவும், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வணிக சமூகத்தை பலப்படுத்தும் இந்த நிகழ்வின ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு என்னை பிரதம அதிதியாக அழைத்ததற்காக சர்வதேச வர்த்தக சபை, பட்டய நிதி முகாமையாளர் நிறுவனம் மற்றும் டெய்லி பைனான்ஸ் டைம்ஸ் ஆகியவற்றிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு விருது வென்றவர்களை வாழ்த்துவதன் மூலம் உரையை நிறைவு செய்கிறேன். வருவாய் அளவு அல்லது தொழில் துறையைப் பொருட்படுத்தாமல் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடிப்படைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உங்கள் சாதனைகள் தெளிவாக நிரூபிக்கின்றன. இன்றைய சவால்களை சமாளிக்கவும், ஒரு நாடாக நாளைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் நாங்கள் பாடுபடுகையில், இன்றிரவு விருது வென்றவர்களின் வெற்றிக் கதைகள் மற்ற நிறுவனங்களை தங்கள் தரத்தை மேம்படுத்தவும் எதிர்கால பொருளாதாரத்தில் திறம்பட வளர்க்கவும் ஊக்குவிக்கும் உதவும் என்றும் நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் உங்கள் வணிகங்களுக்கும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் அதிக உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். Sportswear Design | adidas Yeezy Boost 350