09th February 2021 23:29:31 Hours
கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு அமர்வு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, ஆகியோரின் தலைமையில் நேற்று (9) இடம்பெற்றது. இதன் போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பிலும், மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அறியப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன எடுத்துரைத்தார்.
அதனையடுத்து அவசியமுள்ள துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் – 19 தடுப்புக்கான நடைமுறைகள் பழைமையான முறை பின்பற்றப்படுவதால் இது குறித்து பரிசீலனை செய்யவேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து பணிக்குழுக்களைவைளிநாட்டில் இருந்து வருபவர்கள் தொடர்பான செயல்முறை பற்றியும் இன்று காலை 583 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டமை தொடர்பிலும், இனிவரும் நாள்களில் அழைத்து வரப்பட்ட உள்ளவர்கள் தொடர்பிலும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து தெரிவித்தார். அத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பில் கண்ணோட்டம் செலுத்தி எதிர்காலத்தில் ‘ஏயார் பபல்’ முறையின்படி சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பகுதிகளில் இருந்து பதிவான தொற்றாளர்களின் தற்போதைய நிலைமை பற்றியும், நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுக்குள் கடந்த 24 மணித்தியாலங்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை தொடர்பிலும் கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவல் ஓரளவுக்கு குறைவடைந்திருந்தாலும் பதுளை மாவட்டத்தில் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் அறிவுறுத்தினார்.
மேலும் பதுளை பிரதேசத்தில் அவசர நிலைமைகள் ஏற்பட்டால் அவசியமான அம்பியூலன்ஸ் வசதிகள், முடக்கப்படும் பகுதிகளுக்கு அத்தியவசிய சேவைகளை வழங்குதல் என்பன தொடர்பிலும், தொற்றுக்கு உள்ளானவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லல் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் தற்போது வரை 1,67, 000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை மற்றும் இன்றைய தினத்துக்குள் சுகாதார ஊழியர்கள் சகலருக்கும் தடுப்பூசி நிறைவு செய்ய எதிபார்த்திருப்பதாகவும் என தெரிவித்தார். அத்தோடு, இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ரூ .18 மில்லியன் மதிப்புள்ள தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதாகவும். பிசிஆர் பரிசோதனைகளை திறம்பட நடத்துதல் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில் நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 71 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே அறியப்பட்டதாகவும், ஏனையோர் பிற மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவத்த்தோடு தற்போது பின்பற்றும் மக்கள் நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றினால் வேறு புதிய தடுப்பு முறைகள் அவசியப்படாது என்றும் மஹியங்கனையில் பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு கொவிட் 19 பரவல் குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். Mysneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret