08th February 2021 18:30:30 Hours
இலங்கை இராணுவ வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொழும்பு இராணுவ மருத்துவ கல்லூரியில் “காய பராமரிப்பு” தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்று இடம்பெற்றது. இந்த பயிற்சி பட்டறை இராணுவ வைத்திய கல்லூரியின் பிரிகேடியர் கிரிசாந்த பெனர்ன்டொ தலைமையில் சுகாதார அமைச்சு, இராணுவ வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சூடான் வைத்தியர்களின் பங்கேற்புடன் ஷூம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் திங்கட்கிழமை (01) நடத்தப்பட்டது.
இந்த பட்டறை கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் லெப்டினன்ட் கேணல் ஜி.கே.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றதுடன் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் ஷரித வீரசிங்க, ஜூல் அருஞ்செல்வம், இலங்கை இராணுவ வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர்களுமான லெப்டினன் கேணல் ஆர்.ஏ.எஸ்.ரத்நாயக்க, லெப்டினன் கேணல் எஸ்.ஏ.டி.டபிள்யூ.ஆர். சேனாரத்னே ஆகியோரும் கலந்து கொண்டனர். Adidas shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals