08th February 2021 17:28:40 Hours
கடந்த இரண்டு ஆண்டுகளாக வடக்கு, வன்னி மற்றும் கிழக்கில் உள்ள வறியவர்களுக்கான பல நலன்புரி நிவாரண திட்டங்களை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்களும் நன்கு அறியப்பட்ட திரு குஷில் குணசேகராவின் 'நன்மைக்கான அறக்கட்டளை’ இன் உதவியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினரால் 28 பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 தகுதியான மாணவர்களுக்கான பண வவுச்சர்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு முள்ளியாவலை வித்தியானந்த கல்லூரியில் வெள்ளிக்கிழமை (5) நடைபெற்றது.
591 வது பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ பெரேரா மற்றும் படையினரின் ஏற்பாட்டில் பாடசாலை சமூகம் மற்றும் கிராம சேவையாளர்களின் சிபாரிசிக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்ப மாணவர்களுக்கு 1500 ரூபாய் பெறுதியான DSI வவுச்சர்களுடன் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வாறான காசோலைகளை வழங்குவதற்கான மாணவர்களின் பெயர்கள் பாடசாலை நிர்வாகிகள், கிராம சேவகரின் பரிந்துரையை அடிப்படையாக கொண்டே தெரிவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு.விமலநாதன், நன்கொடையாளர்களின் பிரதிநிதியான 59 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் லமாஹேவா, அதிகாரிகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் சிப்பாய்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். affiliate tracking url | Nike Shoes, Clothing & Accessories