Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2021 11:01:00 Hours

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரப்பன்மடு கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 73 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா வன பாதுகாப்பு திணைக்களம், 7 வது இலங்கை சிங்கப் படை மற்றும் 21 வது இலங்கை சிங்கப் படை ஆகியவற்றின் உதவியுடன் பிரப்பன்மடு பகுதியில் 1000 மரக் கன்றுகளை நாட்டிவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது வண.லிந்தாவெவே அமரஜோதி தேரர் இந்து, இஸ்லாம் மத தலைவர்களும் வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, வன்னி. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி, 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில, 563 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக்க பெரேரா பூனாவை கடற்படை தளத்தின் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப் பணி ,சிவில் விவகார அதிகாரி வன்னி விமானப்படையின் ரேடார் வலய கட்டளைஅதிகாரி , 56 வது படைப்பிரிவின் சிவில் விவகாரங்களுக்கு பொறுப்பு அதிகாரி, சிவில் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி, சிங்கப் படையின் 7,16,21 வது பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போகஸ்வெவ, மஹாகச்சகொடிய பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், 25 மாணவர்கள், பிரப்பன்மடுவ பகுதியின் கிராம உத்தியோகத்தர், பிரப்பன்மடுவ பிரதேசவாசிகள் ஆகியோரும் இந்த நிகழ்விற்கு கைகோர்த்துக்கொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

இந்த நிகழ்வுக்கு கிராமத்தவர்களின் ஆதரவும் கிடைத்தது சிறப்பம்சமாகும். Nike Sneakers Store | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C