06th February 2021 02:00:25 Hours
66 வது படைப்பிரிவு தளபதியாக பதவியேற்ற பின்னர் மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க தனது முதலாவது உத்தியோபூர்வ விஜயமாக புதன்கிழமை (03) 661 வது பிரிகேட், 24 வது விஜயபாகு காலாட் படை மற்றும் 05 வது (தொ) இயந்திரவியல் கலாட் படை ஆகியவற்றிற்கு மேற்கொண்டார்.
இதன்போது புதிய தளபதியை 661 பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சாந்த ஹேவகே வரவேற்றதுடன் பிரிகேடின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பிரிகேடின் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒஸ்மோசிஸ் வடிகட்டு இயந்திர கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் பின்னர் பிரிகேடின் பணிகள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டிவைத்த தளபதி அங்குள்ளவர்களுடன் எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டார். அத்தோடு விருந்தினர் பதிவேட்டில் பதிவிட்டதன் பின்னர் தனது கட்டுப்பாட்டு அலகின் கீழ் இருக்கம் ஏனைய பிரிவுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்தார். Sportswear free shipping | Nike Releases, Launch Links & Raffles