Header

Sri Lanka Army

Defender of the Nation

07th February 2021 18:53:12 Hours

ஓய்வுபெற்றுச் செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

விஜயபாகு காலாட் படையின் முன்னாள் நிலையத் தளபதி ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சிசிர ஹேரத்துக்கு கௌரவம் அளிக்கும் வகையில் தேசிய சுதந்திர தினத்துக்கு முதல் தினமான பெப்ரவரி 3 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டார்.

அதனையடுத்து அவர் ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு, பெப்ரவரி 03 ஆம் திகதியன்று விஜயபாகு காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய தலைமையில் பிரியாவிடை நிகழ்வொன்றும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதன்போது மேஜர் ஜெனரல் சிசிர ஹேரத்துக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர்,போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக படை அதிகாரிகளுடன் குழு படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட அவருக்கு, சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், அவருடைய அர்பணிப்பான சேவையும் பாராட்டப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு விருந்தில் அவர் கலந்து கொண்ட பின்னர், அன்றைய தினம் அவரை வியப்பூட்டும் வகையில் பிறந்த நாள் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக படை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் மேஜர் ஜெனரல் சிசிர ஹெரத்துக்கு ஓய்வு வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய வேண்டுமென வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். Sports News | M2k Tekno