07th February 2021 19:26:58 Hours
ஜனாதிபதியின் பணிப்புக்கு விரைந்து பதிலளிக்கும் வகையில் இராணுவ பொறியியல் சேவை படையினால் தெரணியகல மாலிபொட பொத்தெணிகண்ட மகா வித்தியாலயத்தின் மைதானத்தை புனரமைக்கும் பணிகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிக்காட்டலின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று (6) தெரானியில் நடைபெற்ற ‘ கிராமத்துடன் சுமுகமாக கலந்துரையாடல்' நிகழ்ச்சியின் போது அதிமேதகு ஜனாதிபதியிடம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவத்தின் திறனில் முழு நம்பிக்கை வைத்து பாடசாலையின் தேவையினை நிறைவேற்றுவதற்கு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய, இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அடுத்த நாள் (07) மைதானத்தின் சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்குமாறு படைகளுக்கு விடுத்த கட்டளையின்படி பொது கள பொறியியலாளர் பிரிகேட்டினால் இத் திட்டம் தொழில்நுட்ப நிபுணத்துவம், இயந்திர உதவியுடன் விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளது. latest Nike release | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf