Header

Sri Lanka Army

Defender of the Nation

07th February 2021 18:57:54 Hours

போரில் காயமடைந்த படை வீரருக்கு புதிய வீடு

இராணுவ பொதுச் சேவை படையணியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஆணைபெறாத அதிகாரி ஒருவருக்காக சேவாகம பண்டாரவளை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடூ வெள்ளிக்கிழமை (29) அவருக்கு கையளிக்கப்பட்டது.

இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய இராணுவ விவகார பணிப்பகத்தினால் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதுடன்,மேலும் சில வீரர்களுக்கு இவ்வாறு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக 3 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

அத்தோடு 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அவர் வழங்கிய பங்களிப்பு மற்றும் அவருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களை கருத்தில் கொண்டே அவருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீட்டின் நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்கான மனித வள உதவிகள் 1 வது இராணுவ பொதுச் சேவை படையினராலேயே வழங்கப்பட்டதுடன், முழு நிர்மாண பணிகளானது இராணுவ பொதுச்சேவை படையணியின் படைத் தளபதி சி.கே.ஹண்டுமுல்லவின் வழிகாட்டலின் கீழ் நிலையத் தளபதியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வீட்டை கையளிப்பதற்கான நிகழ்வின் பிரதம விருந்தினராக 1 வது இராணுவ பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சீ.எஸ்.தெமுனி அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததோடு, இந்த போர் வீரருக்கு வீடு வழங்கும் நிகழ்வில் சில அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Running sneakers | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival