Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2021 06:47:42 Hours

பொறியியல் படையணியின் புதிய தளபதிக்கு கௌரவ மரியாதை

இலங்கை பொறியிலளார் படையணியின் 19 வது தளபதியாக நியமிக்கப்பட இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவுக்கு பானாகொடையிலுள்ள பொறியியல் படையணித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இராணுவத்தில் 35 வருட சேவைக் காலத்தினை பூர்த்தி செய்த மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் ஓய்வு பெற்று செல்வதையிட்டே, மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் படையணித் தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் மங்கள மாயாதுன்னவால் புதிய படையணித் தளபதிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், படையணியின் நுழைவு வளாகத்தில் காவலர் அறிக்கையிடலுடன் மரியாதையும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மரியாதை அணிவகுப்பின் நிறைவில் சிறிது நேரத்துக்கு பின்னர் அலுவலகத்திற்கு வருகைத் தந்த மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கைசாத்திட்டார். அதன் பின்னர் அவர் தனது வருகையின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டார்.

இதன்போது, படையினருக்கு உரை நிகழ்த்திய அவர், இராணுவத் தளபதியின் எண்ணங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கை இராணுவ பொறியியல் படையணியை புதிய தொழில்நுடங்களுடன் புதுமைகளை படைக்ககூடிய வகையில் திறமிக்கதாக மாற்றியமைப்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களுக்கான விருந்துபசார ஏற்பாடுகளும் இடம்பெற்றதுடன் அவர்கள் கொவிட் – 19 தடுப்புக்கான சுகாதார படிமுறைகளை பின்பற்றி நடந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும். Running sports | adidas Yeezy Boost 700 , Ietp