06th February 2021 04:37:25 Hours
மேஜர் ஜெனரலகாக உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி 48 வது இராணுவச் செயலாளராக இன்று காலை 5 ஆம் திகதி பதவியேற்றார். பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இந்த நியமணம் வழங்கப்பட்டது.
இராணுவச் செயலாளராகவிருந்த மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே ஓய்வு பெற்றுச் செல்வதாலேயே புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து புதிய செயலாளர் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டதுடன், பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி கொழும்பு திரித்துவ கல்லூரியில் கல்வியை தொடர்ந்ததுடன். 1988 பெப்ரவரி 22 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்துக்கொண்டு, இலங்கை பீரங்கி படையில் இரண்டாம் லெப்டினாக 1989 டிசம்பர் 16 ஆம் திகதி பதவி உயர்வை பெற்றார்.
இவர் இரணுவத்தில் இணைந்த பின்னர் பல பதவி நிலைகளை வகித்துள்ளதுடன், இலங்கை இராணுவ கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர், 571 பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் நிர்வாக பிரிவின் கேணலாகவும், இராணுவ செயலாளர் அலுவலகத்தின் பதவி நிலை அதிகாரி – 1, கேணல் ( இராணுவ செயலகம்), இராணுவ உதவிச் செயலாளர் 2, இராணுவ உதவிச் செயலாளர் உள்ளிட்ட பல பதவி நிலைகளையும் வகித்த அனுபவம் மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இவர் ரண விக்கிரம, ரண சூர, உத்தம சேவா பதக்கம் affiliate tracking url | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov