03rd February 2021 14:21:59 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி ஆப்ரூ, கெந்தலந்தவில் உள்ள திருமணமானவர்களுக்கான குடியிருப்பு தொகுதின் மறுசீரமைப்பு பணிகளை ஜனவரி (25) பார்வையிட்டார்.
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சிந்தனைக்கு ஏற்ப, அனைத்து படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறந்த வசதிகளை வழங்கும் முகமாக, கெந்தலான , பிட்டிபன மற்றும் பனாகொடை ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ குடியிருப்பு வளாகங்களில் தொடர்ச்சியான பழுதுபார்ப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானங்கள், இராணுவ பொறியியல் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விஜயத்தின் போது, வருகை தரும் தளபதி, பணியில் இருக்கும் படையினருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் உயர் தரத்தை பூர்த்தி செய்வதற்கான கட்டுமானத்தை நிறைவேற்ற அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சில பதவி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். jordan release date | Nike Air Max 270