Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2021 08:00:13 Hours

நாடு முழுவதிலும் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 73 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (04) நாட்டிலுள்ள சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் கொடியேற்றல், நாட்டுக்காக உயிர்நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், இராணுவ தளபதியின் செய்தியை வாசித்தல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின விழா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை பார்வையிடல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ்வாறு கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் கலந்து கொண்டர். இந்நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாக மற்றும் விடுதிகள் பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்கவால் தெசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், இலங்கையின் சுதந்திரம், ஒற்றுமை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட உன்னதமான காரணங்களுக்கான உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் 73தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரசன்ன குணரட்னவால் தேசிய கெடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் அவரால் சுதந்திர தினத்துக்கான இராணுவ தளபதியின் செய்தியும் வாசிக்கப்பட்டது.

பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு படைத் தளபதியின் சார்பாக தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாக மற்றும் விடுதிகள் பிரிகேடியர் டி.எம். அபேரத்னவினால் தேசியகொடி ஏற்றி வைக்கப்பட்டு இராணுவ தளபதியின் சுதந்திர தின செய்தியும் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏனைய அம்சங்களும் இடம்பெற்றது.

அதேபோல் 4 ஆம் திகதி ஹம்பந்தோட்டையிலுள்ள 12வது படைப் பிரிவுத் தலைமையக வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வு கொண்டாட்டங்களுடன் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது. trace affiliate link | Nike SB