Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2021 19:56:59 Hours

ஏரோ இந்தியா கடலோர பாதுகாப்பு மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி பங்கேற்பு

இந்தியாவின் பெங்களூரில்(பெப்ரவரி 03-05) இரு வருடங்களுக் ஒரு முறை இடம்பெறும் எரோ இந்தியா விண்வெளி மற்றும் கடலோர பாதுகாப்பு துறைசார் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான தலைவர்களின் மாநாட்டிற்கு இணையாக, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்நுட்ப ரீதியான இணைய வழி மாநாடு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று (05) காலை இடம்பெற்றது.

எரோ இந்திய மாநாட்டின் 13 ஆவது பதிவான வீடியோ தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்த கரையோர பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கான மாநாடு இலங்கையிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இலங்கை பாதுகாப்பு படையினருக்கு அதி நவீன உபகரணங்கை உபயோகித்தல் தொடர்பான தெரிவுகளை இந்த மாநாடு வழங்கியது.

அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமால் குணரத்ன கலந்துகொண்டதோடு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வாவும் கலந்துகொண்டார்.

'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்ற எண்ணக்கருவிலான இந்த இணைய வழி அமர்வுகளின் போது, இலங்கை பாதுகாப்புப் துறையினரும் இந்திய பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும் தொடர்புகொள்வதற்கும், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறை மற்றும் அதன் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய முதல் தகவல்களைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது.

நிகழ்வின் ஆரம்பமாக இந்திய உயர்ஸ்தானிகரால் அறிமுக உரையொன்று நிகழ்த்தப்பட்டதுடன், இந்த மாநாடு வளர்ந்து வரும் இலங்கை இந்திய நல்லுறவை வெளிப்படுத்தல் மற்றும் பிராந்தியத்திலுள்ள சகல நாடுகளுக்கும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தலை அடிப்படையாக்கொண்டவையாகும்.

அதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன தனது உரையில், இலங்கையின் புவியியல் அமைப்பு சகல விடயங்களிலும் சிறந்து விளங்குகிறது என்றும், இலங்கை அதன் நிலப்பரப்பின் 27 மடங்கு அளவு மற்றும் பிரத்தியேக பொருளாதார விவகாரங்களில் 200 கடல் மைல் பரப்பளவில் தேடல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பை கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற இணைய வழி கடலோர பாதுகாப்பு மாநாடு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பான, மற்றும் தூய்மையான கடலுக்கான கூட்டு அணுகுமுறை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டமைக்காக நன்றிகளை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி வைத்தார். பின்னர் அந்த இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களின் சில பிரதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த மாநாட்டில் இந்திய உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்பு ஆலோசகர்கள், மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்பு உபகரண தொழில் அதிபர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர். Sports Shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1