Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2021 12:00:59 Hours

66 வது படைப்பிரிவின் புதிய படைத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்

66 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க,662 பிரிகேட், 20 வது(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மற்றும் 20 வது விஜயபாகு காலாட் படையணி என்பவைக்கு பெப்ரவரி (01) விஜயம் செய்தார்.

இதன் போது 20 வது இலேசாயுத படைப்பிரிவினரால் படைத் தளபதிக்கு காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் 662 வது பிரிகேடின் தளபதி கேணல் சமிந்த லியனகேவால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனையடுத்து படைத் தளபதிக்கு பிரிகேட்ட தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளினால் படைகளின் செயற்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டது.

படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் 662 வது பிரிகேடின் வளாகத்துக்குள் மரக்கன்று ஒன்றை நாட்டிவைத்தார். அதனைத் தொடந்து அவர் அடுத்த படையணிக்கு புறப்பட்டுச் சென்றார். Sportswear free shipping | Nike Off-White