Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2021 18:39:20 Hours

பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவ தளபதியால் நிலை சின்னங்கள் அணிவிப்பு

இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் 12 பேருக்குமான தர சின்னங்களை, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அணிவித்ததுடன், ஶ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் அமைந்துள்ள இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது.

அதன்படி கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதியான இலங்கை இராணுவ சேவைப் படையின் மேஜர் ஜெனரல் பிரியால் நாணயக்காரவசம்,12 வது படைப்பிரிவின் படைத் தளபதியான விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, 23 வது படைப்பிரிவின் படைத் தளபதியான விஜயபாகு காலாட் படையணியைச்சேர்ந்த தளபதி நளீன் கொஸ்வத்த, 56 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியான கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நன்தன துனுவில,62 வது படைப்பிரிவின் படைத் தளபதியான விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த தீபால் புஸ்ஸல்ல, பிரிகேடியர் விணியோக, இராணுவ விணியோக கட்டளை கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் அஜந்த விஜேசூரிய, திட்டமிடல் பணிப்பாளர் நாயகமான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க,இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதியான கொமாண்டோ படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன, புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகமான இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவ செயலாளரான இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி, அம்பாறை கம்பெட் பயிற்சி கல்லூரியின் தளபதியான கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் ஷமிந்த லமாஹேவா,மின்னேரியவிலுள்ள இலேசாயுத காலட் படையணியின் தளபதியான இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன ஆகியோருக்கே இவ்வாறு தர சின்னங்கள் அணிவிக்கப்பட்டது.

இதன்போது, நாட்டுக்கு அவசியமான சேவை செய்வோருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதையிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறான பதவி உயர்வுகள் அவர்களுடைய கடினமாக பணிக்கு ஊக்குவிப்பாக அமையும் எனவும், அதனை வெறுமனே அவர்களுடைய தகைமையாக மாத்திரம் பார்க்க முடியாதெனவும் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகள் சிறப்பாக அமையவும், பாதுகாப்பான தேசத்தை கட்டியெழுப்பவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அத்தோடு சமூக பணிகளில் அக்கறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அத்துடன் கொவிட் – 19 நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் அதேவேளை படையினரை பாதுகாப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அதற்குரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் இராணுவ தளபதியின் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார். trace affiliate link | adidas garwen spezial white shoes - New In Shoes for Men