03rd February 2021 12:21:59 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அதிகாரிகள்,பொது சுகாதார அதிகாரிகள்,டெங்கு நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்கேற்பில் செவ்வாய்க்கிழமை(02) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
73 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பணிகள் 51,52 மற்றும் 55 வது படைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த சிரமதானப் பணிகளுக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். Nike footwear | Nike for Men