02nd February 2021 20:51:08 Hours
கிழக்கு பாதுகாப்பு படையின் முன்னாள் படைத் தளபதியான இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, தனது 34 வருட இராணுவ சேவையை பூர்த்தி செய்துகொண்டு ஓய்வு பெறுவதை முன்னிட்டு, படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் அவருக்கு (28) பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அவருடைய சேவையின் இறுதி நாளில் படைத் தலைமையகத்துக்கு வருகைத் தந்த அவருக்கு இராணுவ மரபுகளுக்கு அமைய மரியாதை அளிக்கப்பட்டதுடன், நிலையத் தளபதி பிரிகேடியர் மங்கள மாயாதுன்ன சிறப்பு வரவேற்பளித்தார்.
அதனுடன் காலவர் அறிக்கையிடலுடன் கூடிய மரியாதை செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் மாலையும் அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் தேநீர் விருந்துசாரம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக படையினரின் அணிவகுப்புடன் வெளி வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு அவருடைய வாகனத்தில் வழியனுப்பட்டார்.
மேஜர் ஜெனரல் சிந்தக கமகே 1986 மார்ச் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்ததுடன், 1987 பெப்ரவரி 21 ஆம் திதி ஆணைபெற்ற அதிகாரியாக தரமுயர்த்தப்பட்டார். அதன்படி ஓய்வுபெறும் வரையில் சுமார் 35 வருட சேவையை பூர்த்தி செய்துள்ளார் என்பதும் இராணுவத்தில் பல நியமனஙகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Running sport media | jordan Release Dates