03rd February 2021 10:21:59 Hours
கொவிட் – 19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாத்தளை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியான 53 வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டச் செயலாளர் திரு எஸ்.எம்.பி.கே.பெரேரா மாத்தளை மாவத்திட்டத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றமை, விழிப்புணர்வு,பொறுப்புகள், தடுப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றம், சமூக பாதிப்பு, தனிமைப்படுத்தல், எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள், என்டிஜன் பரிசோதனைகளை நடத்துதல்,மாவட்ட அதிகாரிகள், பொலிஸாருடன் ஒன்றிணைந்து பரவலை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தல் என்பன தொடர்பாக அறிவுருத்தினார்.
இதன்போது மாத்தளை மாவட்டத்தில் கொவிட் – 19 பரவலைத் தடுப்பது தொடர்பான விடங்களை பற்றிய கலந்துரையாடலுக்காக பொலிஸ் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மாத்தளை மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். jordan release date | Nike nike dunk high supreme polka dot background , Gov