Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2021 09:21:59 Hours

மேலும் 711 உள்நாட்டவர்கள் தொற்றாளர்களாக இணங்காணல்

இன்று (04) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 236 பேர், கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (04) காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக 66,408 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 62,421 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொர்புபட்டவர்களாவர். 59,882 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,194 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 840 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் யடியன்தொட,தெவலபொல ,வல்கம்முள்ள , மற்றும் நீர்க்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர். அதன்படி (04) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (04) காலை நிலவரப்படி, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 91 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 7,400 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று வரை (03) 13,218 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. Best Nike Sneakers | Buy online Sneaker for Men