Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 14:25:34 Hours

புதிய படைத்தளபதி 11 மற்றும் 12 வது பீரங்கி படைகளுக்கு விஜயம்

இலங்கை பீரங்கிப் படையின் புதிய தளபதியும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, தனது முதல் விஜயத்தை மன்னார் கூராய் பிரதேசத்திலுள்ள 12 வது (தொண்டர்) இலங்கை பீரங்கிப் படைக்கு 2021 ஜனவரி 26ம் திகதியும் அடுத்த நாள் 27ம் திகதி 11 வது இலங்கை பீரங்கிப் படைக்கும் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டதுடன் 12 வது (தொண்டர்) இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.பி.பி.பி.திஸாநாயக்க மற்றும் 11 வது இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.எம்.வீ.டி. அபேசிங்க ஆகியோராலும் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அந்தந்த படைகளின் கட்டளை அதிகாரிகளினால் தங்களது வகிபாங்கு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

விஜயத்தின் நிறைவாக மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட அலுவலக வளாகத்தில் மரக் கன்று ஒன்றினை நாட்டி வைத்ததுடன், விருந்தினர் பதிவு புத்தகத்திலும் பதிவிட்டார்.

மேலும் இரண்டு முகாம்களிலும் நிகழ்வில் கலந்துகொண்ட படையினருடன் தனது எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டார். Sports News | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov