03rd February 2021 11:21:59 Hours
முதன்மை சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அமர்வு நேற்று (02) இடம்பெற்றது. இந்த அமர்வில் தலைமையில் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 800க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா, கண்டி மாவட்டங்களிலேயே அறியப்பட்டுள்ளனர் எனவும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும் முகாமைத்துவம் செய்யக்கூடிய எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டுக்கு வந்தனர். சுகாதார விதிமுறைகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் வெளிநாடுகளிலிருந்து கடந்த வாரத்தில் 500 – 800 வரையிலானவர்கள் நாடு திரும்பியிருந்தனர் என்றும் இராணுவ வைத்தியசாலையில் ஓரே நாளில் 7000 கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன என்றும் தெரிவித்தார்.
அதேபோல் தடுப்பூசி வழங்கும் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும், வியட்நாம் இராணுவத்தினருக்கும் இலங்கை இராணுவத்தினருகும் இடையில் நடைப்பெற்ற வீடியோ மாநாடு ஒன்றில் தனிமைப்படுத்தல் செயன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை பயனுடையதாக அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.
இதன்போது, இரு தரப்புக்களினதும் கருத்து பரிமாறல்கள் ஒன்றோடு ஒன்று பொருத்தமானதாக காணப்பட்டது என்றும், தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிபுணர் குழு ஒன்றினை நியமித்து மீள்பரிசீலனை செய்து அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள், நோயிலிருந்து குணமடைந்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் , நோய் அறிகுறிகள் அற்ற தொற்றுக்கு உள்ளானவர்களை 10 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தல், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் என்பன பற்றியும் கருத்து தெரிவித்தார். தற்போது இடம்பெற்றுவரும் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகள், எழுமாறான பீசிஆர் பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மையங்களுக்குள் இடம்பெறும் ஒழுங்கீனமான செயற்பாடுகளால் வருகின்ற சிக்கல்கள் என்பன பற்றியும் அறிவுறுத்தினார். மேலும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள் நடத்துதல், இடம்பெறும் கூட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் தொற்று உள்ளவர்களை கண்டறியும்போது எடுக்கப்பட வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் முன்னேற்றங்கள், தனிமைப்படுத்தல் பகுதிகளை முகாமைத்துவம் செய்தல், புதிய பகுதிகளுக்குள் வைரஸ் பரவல், பொதுமக்களின் நடத்தைகள், மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுத்தல் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. Adidas shoes | Nike - Shoes & Sportswear Clothing