01st February 2021 16:30:34 Hours
குட்டிகலையில் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவ பொதுச் சேவைகள் படையணியின் தொழிலாண்மை கல்லூரியின் கட்டளை தளபதி லெப்டினண் கேணல் எம் கே.எஸ்.டி சில்வா அவர்களின் அழைப்பின்பேரின் வெள்ளிக்கிழமை (29) நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொதுச் சேவைகள் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் குமார ஹந்தமுள்ள பிரதம விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்.
இதன்போது மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுடன் பாரம்பரிய முறைகளுக்கமைய சிரேஸ்ட அதிகாரிகளால் மங்கள விளக்கேற்றி இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் பிரிகேடியர் சானக மெட்டாநந்த, சம்பளம் மற்றும் நிதி ஆவணங்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் சாலிய பிரிகேடியர் பத்மசாந்த, இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் பிரியந்த அபேசிங்க, இராணுவ பொதுச் சேவை படையணியின் நிலையத் தளபதி, கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதனையடுத்து பிரதம விருந்தினர் மாங்கன்று ஒன்றை நாட்டல் மற்றும் அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்துடன் அன்றைய நிகழ்வு நிறைவுக்கு வந்தது. Sneakers Store | Nike Running