01st February 2021 14:15:34 Hours
கேணல் சிந்தக விக்கிரமசிங்க 551 வது பிரிகேடின் 21 வது தளபதியாக காங்கேசன்துறை பருத்திதுறையிலுள்ள பிரிகேட் தலைமையகத்தில் அலுவலக வெள்ளிக்கிழமை (29) கடமைகளை ஆரம்பித்தார்.
இதன்போது தலைமையக வளாகத்தில் 4 வது இலங்கை சிங்க படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு புதிய தளபதி வரவேற்கப்பட்டார்.
பிரிகேட் தளபதி மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டதுடன், தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார். பின்னர் படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் கலந்துகொண்டனர். spy offers | Nike