01st February 2021 13:30:34 Hours
பத்தரமுல்லை அக்குரேகொடவில் உள்ள 144 வது பிரிகேட் தளபதியாக பிரிகேடியர் வசந்த லியனகே கடமைகளை செவ்வாய்க்கிழமை (26) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது 144 வது பிரிகேடின் புதிய தளபதி மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டதுடன் பிரிகேடியர் வசந்த லியனகே மேற்படி பிரிவின் தளபதியாக பொறுப்பேற்க முன்னர் தொப்பிலகவிலுள்ள 232 வது பிரிகேடின் தளபதியாக சேவையாற்றினார்.
அதன் பின்னர் அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களுக்கு உரையாற்றிய புதிய தளபதி தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
பிரிகேடியர் வசந்த லியனகேவுக்கு முன்னர் 144 பிரிகேடின் தளபதியாக சேவையாற்றிய பிரிகேடியர் துஷார மஹலகமுவ வவுனியா விசேட படை பிரிகேடின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். latest Running | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ