Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 16:00:34 Hours

கிளி பாதுகாப்பு படை விளையாட்டு வீரர்களுக்கு புதிய விளையாட்டு அரங்குடன் புதிய மைதானம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் தேவையாக காணப்பட்ட அனைத்து தேவைகளுடனான விளையாட்டு அரங்கு மற்றும் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் படையினரின் பாவனைக்காக சனிக்கிழமை (30) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு திறந்து வைத்தார்.

தரிசு நிலமாக காணப்பட்ட முகாம் வளாகத்தின் ஒரு பகுதியில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கம் 11 வது பொறியியல் சேவைகள் படை மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் சிரம ஒத்துழைப்பில் அரங்கு கட்டுமானம் மற்றும் விளையாட்டு மைதானம் உயர் தரத்துடன் நிர்மானிக்கப்பட்டது.

திறப்பு விழாவில் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் இரு அணிகளுக்கு இடையே ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் சமன் லியானகே, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க, சிரேஸ்ட பணி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். Nike footwear | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4