Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 17:31:02 Hours

ஜனாதிபதியின் பணிப்புக்கமைய மேலும் ஒரு மைதான சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதியின் பணிப்பை ஏற்று இலங்கை பொறியியல் படையினரால் ரத்தபலாகம ஹம்பேகமுவ கனிஷ்ட பாடசாலையின் மைதானத்தை சீறமைக்கும் பணிகள் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்ட வழிக்காட்டல்களின் படி சனிக்கிழமை (31) ஆரம்பிக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதியின் கிராமத்துடனான சமூகமான சந்திப்பு நிகழ்ச்சில் பங்கேற்க, ஹம்பேகமுவ பிரதேசத்துக்கு சென்றிருந்த போது அவரிடத்தில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் பணிகள் ஜனாதிபதியால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வினால் தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவிடம் அடுத்த 10 மணித்தியாலங்களுக்குள் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியமைக்கு அமைவாக பொறியியல் பிரிகேட்டினரால் இராணுவ மனித வளம் மற்றும் இயந்திரங்களை கொண்டு அடுத்த நாள் (31) அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. jordan Sneakers | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth