Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2021 17:33:20 Hours

இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதி பல பிரிவுகளுக்கு விஜயம்

இலங்கை இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி ஆப்ரூ 6 , 7, 11 , 12, 15, 23 , 9 (தொண்டர்), 14 (தொண்டர் ) மற்றும் 16 (தொண்டர்) ஆகிய இலங்கை இலேசாயுத காலாட் படை முகாம்களுக்கு 22ம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு படையினர்களுடன் கலந்துரையாடினார்.

குறித்த முகாம்களின் கட்டளை அதிகாரிகளினால் வரவேற்கப்பட்ட படைத் தளபதிக்கு படையினரால் வாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இதன் போது விஜயத்தின் நினைவாக முகாம்களில் மரக் கன்றுகளை நாட்டி வைத்தார். பின்னர் கட்டளை அதிகாரியினால் நிர்வாகம் உள்ளிட்ட விடயங்கள் பற்றிய விளக்கமளிக்கப்பட்டது.

அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையில் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். Sports brands | Nike News