01st February 2021 14:38:34 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கமைய 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் நிதி உதவிகளை கொண்டு ஒட்டுச்சுட்டான் பகுதியின் பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு 250 மூக்கு கண்ணாடிகளை வெள்ளிக்கிழமை 29 ம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
64 வது படைப்பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முதலில் பார்வை குறைபாடுகள் தொடர்பான வைத்தியர்களை கொண்டு ஆராயப்பட்ட பின்னரே பயனாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன், 641 பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சகல இன சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. திரு ஜகத் குமார மற்றும் அவரது தென்பகுதி நண்பர்களும் இணைந்து இந்த நன்கொடையை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வின் போது கண்ணாடிகளை பெற்றுக்கொள்ள வருகைத் தந்தவர்களுக்காக காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
641 பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்க படையினரும் மேற்படி திட்டம் வெற்றியளிக்க உதவிகளை வழங்கியிருந்ததுடன், ஒட்டுச்சுட்டான் சமூகத் தலைவர்களும் பொதுமக்களும் இந்நிகழ்விற்கு கலந்துகொண்டு இராணுவத்தின் இச்சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். Sports Shoes | Nike for Men