01st February 2021 08:53:47 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 படைப்பிரிவின் 642 வது பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படை கட்டளை அதிகாரியின் வேண்டு கோளுக்கிணங்க, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடம் கிடைக்கப்பெற்ற மூன்று இலட்சம் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் ஒட்டுச்சுட்டான் சமலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை , சின்னத்தம்பி பாடசாலை, சின்னசலம்பன் ஈஸ்வரன் பாடசாலை , கரிபட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் வறிய மாணவர்களுக்கு புதன்கிழமை (27) பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கரிபட்டமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றிருந்ததுடன், அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுலா கருணாரத்ன கலந்துக்கொண்டார். மேலும், 624 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரசன்ன விஜேசூரியவின் மேற்பார்வையில் 23 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மற்றும் அதன் படையினர் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அமெரிக்க நியூஜோர்ஜியாவில் வசிக்கும் திருமதி பிரியந்த கமகே, அவுஸ்திரேலியாவின், மெல்போர்னில் வசிக்கும் வைத்தியர் துஷார லால், கனடாவில் வசிக்கும் திரு. சுப்பிரமணியம் ரவீந்தரதாஸ் மற்றும் வத்தளையைச் சேர்ந்த வைத்தியர் செபா ஜயமஹா ஆகியோர் மேற்படி நன்கொடைகளை வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.டி.அகிலன், அரச அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். Mysneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov