01st February 2021 11:00:32 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 31ம் திகதி இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் “சுபாரதி” வானொலி நிகழ்ச்சியில் “லக் மவ செனஹூ தருவோ” என்ற தலைப்பிலான நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் இராணுவ தளபதி தற்போதைய சூழலில் இராணுவத்தின் செயற்பாடுகளை எவ்வாறு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த முடியும் என்பது பற்றியும், நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் – 19 வைரஸ் கட்டுப்பாடு, புதிய கண்டுபிடிப்புக்கள், இராணுவத்தின் முன்மாதிரியான செயற்பாடுகள் பற்றியும் விளக்கினார். அதே நேரம் இராணுவத்தினால் நாடு முழுவதும் எவ்வாறு கொவிட் – 19 தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கினார். Mysneakers | Nike Shoes