31st January 2021 21:33:49 Hours
நல்லிணக்க நகர்வுகளுக்கமைய நெருங்கிய புரிதலை உருவாக்குதல், பழைமையான உறவுகளை புதுப்பித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக வடக்கு இளைஞர்களின் சிங்கள மொழிக் கல்வி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய இலங்கைப் பேரவையின் உதவியுடன் இந்து - பௌத்த கலாசார ஒன்றியத்தின் முயற்சியில் சிங்கள தேசிய மொழிக்கான மத்திய நிலையம் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வியாழக்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.
‘மொழி ஊடான ஒற்றுமை' எனும் தொனிப் பொருளிலில் வடக்கு பகுதியிலுள்ள மக்களுக்கு சிங்கள மொழி தேர்ச்சியை வழங்கி இந்துக்களுக்கம் பௌத்தர்களுக்கம் இடையிலான மத ஒற்றுமையை புரியவைத்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி நன்கொடையாளர்களின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெரனல் சம்பத் கொட்டுவேகொட இந்நிகழ்வில் பிரதமர விருந்தினராக கலந்துகொண்டதுடன்,தேசிய மொழிக்கான மத்திய நிலையத்தினை நடா வெட்டி திறந்து வைத்தார். இதன்போது, எம்.டி.எஸ்.சட்டச் நிறுவனத்தின் தலைவரும் இந்து - பௌத்த கலாசார ஒன்றியத்தின் செயலாளருமான கலாநிதி தேசமான்ய எம்.டி.எஸ்.ராமச்சந்திரன், 571 வது பிரிகேடின் தளபதி கேணல் தம்மிக்க வெலகெதர, பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் அலுவல்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேணல் எல்.கித்சிறி உள்ளிட்ட இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேசிய மொழிக்கான மத்திய நிலையத்தில் 6 – 15 வயது வரையானவர்களை கற்றைக்காக உள்ளீர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது. latest Running | Mens Flynit Trainers