01st February 2021 17:01:02 Hours
கொழும்பு ரோயல் கல்லூரியின் 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் , திரு. பிரசாத் லொகுசூரிய மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய பட்டதாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்கவின் வழிகாட்டலில் 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்னவினால் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு தமிழ் கலவன் பாடசாலையில் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வியாழக்கிழமை (28) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார் இச் செயற்றிட்டமானது இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மத தலைவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள். அதிகாரிகள், ஒத்துழைப்பு வழங்கிய சங்கங்களின் பிரதிநிதிகள், சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகளும் கலந்துகொண்டனர். jordan Sneakers | Nike Shoes