Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2021 19:33:20 Hours

சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவ சிப்பாய்களை உரிய வசதிகளுடன் பாதுகாப்பது அவசியம்

"இராணுவத்தில் கட்டளையிடும் பதவி நிலையில் இருப்போர் சகல தருணங்களிலும் தமது கட்டப்பாட்டுக்கு கீழ் இருப்போரின் நலன்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், விலைமனுக் கோரல்கள் பணிகளில் ஈடுபடுவோர் கவனமாக செயற்படுவதுடன், கட்டப்பாட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தரமான பொருள்களை பெற்றுத்தர முன்வர வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

"அதேநேரம் தங்களது நிர்வாக பிரிவுகளின் கீழ் உள்ள குறைப்பாடுகளை ஆராய்ந்து இளம் தலைவர்கள், வீரர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்றும் இராணுவத தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (29) பிற்பகல் இரணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தலைமையகத்தின் உயர் பதியணியினருக்கான பேட்டன் வழங்கும் நிகழ்வில் நிகழ்த்திய உரையில் வலியுறுத்தினார்.

""உங்களுக்குத் தெரியும், நிர்வாக சேவைக்கு மேலதிகமாக உங்களில் சிலரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். அதனால் நாட்டின் சிவில் நிர்வாகத்துட்ன இணைந்து பணியாற்றவும் கொவிட் – 19 தொற்று நோய் தடுப்பு பொறிமுறைக்கு பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. தற்காலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்படக்கூடிய அங்கீகாரத்தை உங்களுக்கு வழங்கப்பட்ட பேட்டன்கள் குறிக்கின்றன.

"மேலும் புதிய நியமனம் பொறுப்புக்களுடன் கூடியதாக வருகிறது என்ற வகையில், இது உங்களுடைய தொழில் முறைக்கான சோதனையாக அமையப்போகிறது. அதேபோல் உங்கள் கீழுள்ள படைகளின் பாதுகாப்பையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், கொவிட் – 19 தொற்றிலிருந்து கீழுள்ள படைகளை பாதுகாக்கும் பணிகளை அவர்களிடத்தில் ஒப்படைக்க முடியும்.

""இந்த நாட்டையும் அதன் மக்களையும் கொவிட் - 19 அச்சுறுத்தலிலிருந்து பாதுகாத்தல், முப்படையினரின் சேவைகள் ஆகியவற்றில் இலங்கை இராணுவத்தின் மீது ஜனாதிபதி அதிகபடியான நம்பிக்கை கொண்டுள்ளார்.

"ஜனாதிபதியின் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டமான செளபாக்கியமான நாடு செழிப்பான அரசாங்கம் என்பதை அடிப்படையாக கொண்டு எந்தவொரு அவசர நிலைமையிலும், இலங்கை மக்களுக்கு பதிலளிக்கும் தரப்பாகவும், மீட்கும் தரப்பாகவும் இலங்கை இராணுவம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

"இதன் காரணமாக இலங்கை இராணுவத்தின் பொறுப்புகள் முன்னரைவிடவும் விரிவடைந்துள்ளதோடு, உரிய நேரத்தில் தகுந்த பதில் செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னும் திறன்களை ஏராளமான திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார். அதற்கான சகல வாய்ப்புக்களையும் இராணுவத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் தேசிய பாதுகாப்புக்கு இராணுவம் உத்தரவாதம் அளித்திருக்கிறது எனவும், அதற்கு பங்களிப்புச் செய்வதுடன், அதற்கு அவசியமான உடல், உள, நலன்களை பாதுக்காத்துக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

""இலங்கை இராணுவத்தின் முன்னோக்கி நகர்வதற்கான மூலோபாய திட்டம் 2020-2025" இலங்கை இராணுவத்தை ஓர் நம்பகமானதும், பொருத்தமானதுமான சக்தியாக அடுத்த ஐந்தாண்டுகளில் மாற்றியமைக்க உறுதிப்படுத்துகிறது.

"அதன்படி உரிய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதில் திருப்தியடையும் அளவுக்கு பலன்களையும், வெற்றிகளையும் ஈட்டிக்கொள்ள உதவி வழங்குவீர்கள் என உங்களை நம்புகிறேன்.

"நீங்கள் நன்கு அறிதிருப்பீர்கள். இன்று பாரிய இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாறாக இராணுவம் சார்ந்த மற்றும் சாராத அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய கட்டாய நிலை வந்துள்ளது. அத்துடன் அண்மையில் முழு உலகமு எதிர்க்கொண்ட அச்சுறுத்தலே அதற்கு சாட்சியாகும்.

"சரியான நேரத்தில் திறன்களை பயன்படுத்தி உரிய பலன்களை அடைந்துகொள்வதற்கான நிபுணத்துவங்களை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இராணுவத்தை கட்டமைப்பதற்கு அவசியமான சகல வாய்ப்புகளையும் அரசாங்கம் இராணுவத்துக்கு வழங்கியிருக்கிறது.

"அதற்காக உங்களிடமிருந்து உங்களுடைய துணை அதிகாரிகளுடமிருந்தும் விசுவாசம், நம்பிக்கையை எதிர்பார்க்கிறேன். அந்த விடயத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நேர்மை மிக உயர்வானது என்ற வகையில் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தும் போது உங்கள் மீதான நம்பிக்கை சிதையா வண்ணம் பயன்படுத்துங்கள் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டார். Adidas shoes | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD