Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2021 13:28:38 Hours

தலைமை சமிக்ஞை அதிகாரிக்கு 7 வது இலங்கை சமிக்ஞை படையணியில் பிரியாவிடை

7 வது இலங்கை சமிக்ஞை படையணியின் தலைமையகத்தில்ஓய்வு பெற்றுச் செல்லும் தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அதீப திலகரட்னவுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு வௌளிக்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்றது.

7 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.ஆர்.ஹமீம் ஓய்வுபெற்றுச் செல்லும் அவருக்கு வரவேற்பு

அளித்ததுடன், காவலர் அறிக்கையிடலுடன் மரியாதையும் செலுத்தப்பட்டது.

பின்னர் படையினர் முன்பாக உரை நிகழ்த்திய ஓய்வு பெற்றுச் செல்லும் அவர் சகல படையினரும் தங்களுடைய தொழில் முறையை அவசியமான வகையில் பயன்படுத்திகொள்வதோடு ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதனையடுத்து லெப்டினன் கேணல் எம்.ஆர்.ஹமீம் ஓய்வுபெற்ற தளபதிக்கு அவரின் சேவையினை பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் விருந்தொன்றிலும் அவர் கலந்துகொண்டதுடன், அதிதிகள் புத்தகத்தில் தனது வருகையின் சிறப்பம்சங்களையும் குறிப்பிட்டார். அதனையடுத்து படைப்பிரிவுக்கு வருகைத்தந்ததன் நினைவாக ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரி மரக்கன்று ஒன்றிணையும் நாட்டி வைத்தார். Best Authentic Sneakers | Nike