28th January 2021 15:35:49 Hours
கொமாண்டோ படையணியின் 15 வது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ கேணேமுலவில் அமைந்துள்ள கொமாண்டோ படையணித் தலைமையகத்தில் திங்கட்கிழமை (18) எளிய நிகழ்வொன்றுடன் பதவியேற்றுக்கொண்டார்.
படைத் தலைமையகத்திற்கு தளபதி வருகைத் தந்த போது கொமாண்டோ படையினரால் காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் சம்பிரதாய பூர்வமாக பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
அதனையடுத்து தலைமையக வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் மதிய விருந்துபசாரத்திலும் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞானரத்ன, கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாணக்க ரத்நாயக்க, நிலையத் தளபதி ஷியாமால் சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் ஏனைய பதவி நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். url clone | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp