28th January 2021 14:12:38 Hours
கண்டி, குண்டசாலை , நாகஸ்தென்ன பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததால் அந்த சரிவுக்குள் சிக்கிக்கொண்ட நபர்கள் இருவரை மீட்க உதவுமாறு கண்டி தீ அணைப்பு பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு விரைந்து பதிலளித்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 2வது(தொண்) சிங்க படையணியின் படையினர் அந்த நபர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
படையினரின் அயராத முயற்சியாலும் தீயணைப்பு படையினர் , பொது மக்களின் ஒத்துழைப்புடனும் மண்ணை அகற்றிய பின்னர் மண்ணுக்குள் சிக்கிகொண்ட இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இவர்கள் மூவரும் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. best Running shoes brand | Nike