Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2021 08:22:30 Hours

232 வது பிரிகேடின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கேணல் ருவான் விஜேசூரிய தாராவிக்குளம் , தொப்பிகல பகுதியிலுள்ள 232 வது பிரிகேடின் 17 வது தளபதியாக சனிக்கிழமை (23) தனது கடமைளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது தனது பதவியேற்பின் நினைவாக புதிய பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார். அதனைத் தொடர்ந்து அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள், பிரிகேட் படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Asics footwear | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp