29th January 2021 22:58:55 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் எண்ணக்கருவின் கீழ் 52 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் வழிகாட்டுதலில் 523 வது பிரிகேடின் படையினரின் ஏற்பாட்டில் சாவகச்சேரியிலுள்ள பூமாரி மண்டபத்தில் வைத்து 75 கர்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று (28) வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்விற்கான அனுசரணையானது கொழும்பு தரண அறக்கட்டளையின் தலைவர் திருமதி சுராஜினி விக்கிரமரட்னவினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதமர விருந்தினராக அழைக்கப்பட்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து இந்த அன்பளிப்பை வழங்கவைத்தனர்.
இவ்வாறான பொதிகள் ஒவ்வொன்றும் 2750.00 ரூபாய் பெறுதியான பொருள்களை உள்ளட்டக்கியவை என்பதுடன் அவற்றில், உழுந்து,பால்மா,பருப்பு, டின் மீன், அரிசி, கெளபி, பயறு கொவிட் -19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற தொற்று நீக்கிகள் (செனிடைஸர்கள்), முக்க கவசங்கள் உள்ளிட்டவைகளும் பொதியில் உள்ளடங்கியிருந்தன.
யாழ்ப்பாண தீபகற்பத்தின் தூரப் பகுதிகளில் உள்ள தாய்மார்கள் சிலர் இந்த பொதிகளை பெற்றுக்கொள்ள அவசியம் உள்ளவர்கள் என அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல்களின் படி உரியவர்களுக்கு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ் சாவகச்சேரி இந்து கோவிலின் குருக்கள் ஒருவரும், 52 வது பிரிவின் படைத் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பதவி நிலை அதிகாரி, பிரிகேட் தளபதிகள்,சாவகச்சேரி பிரதேச செயலாளர்,சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சாவகச்சேரி பொது சுகாதார பரசோதகர், அரச அதிகாரிகள், தரண அறக்கட்டளையின் பிரதிநிதிகள், இராணுவச் சிப்பாய்கள் என பலரும் கலந்துகொண்டனர். Running sneakers | Air Jordan Release Dates 2020