Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2021 23:45:16 Hours

இராணுவத் தளபதியினால் படையணிகளின் படைத் தளபதிகளுக்கு விஷேட பேட்டன்கள் வழங்கி கெளரவிப்பு

படையணிகளின் படைத் தளபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக இராணுவத்தில் முதன் முறையாக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பேட்டன்களை அவர்களுக்கு இன்று (29) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தலைமையகத்தில் வழங்கி வைத்தார்.

மரக் கலையினால் தயாரிக்கப்பட்ட இவ்வகை பேட்டன்கள் அங்கீகரிக்கப்பட்ட நியமனங்களை கௌரவிக்கும் வகையிலும் கட்டளையின் முக்கியத்துவத்தை குறிக்கிம் சடங்காகவும் உள்ளது.

அதேபோல், அந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பேட்டன் வழங்கப்பட்டத்தற்கு மேலாக இராணுவ தளபதியால் சிறப்பு ஒப்புதல் சான்றிதழ்களும் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.

பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அந்த பேட்டன்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார், அதன் போது இந்த இயற்கையோடு சம்பந்தப்பட்ட பேட்டன்கள் எதற்காக இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது என்பதனையும் விளக்கினார்.

குறித்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து இந்த நிகழ்வில் கீழ்வரும் அதிகாரிகள் பெட்டன் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதி செயல்திட்ட பிரிவின் மேலதிக பணிப்பாளரும் இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பீ.பீரிஸ்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்.பி.என்.கே.ஜயபத்திரன.

இராணுவ தலைமையகத்தின் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி.கே ஹந்துன்முல்ல,

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.என்.எஸ் கொட்டுவேகோட

இராணுவ பயிற்சிப் மற்றும் கட்டளை தளபதியும் இயந்திரவியல் காலாட்படையணியின் படைத் தளபதியுமான .மேஜர் ஜெனரல் எஸ்.எஸ் வடுகே

விணியோக கட்டளைத் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் பிரேமலால்

உபகரண மாஸ்டர் ஜெனரலும் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி.யூ. மாரசிங்க

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.பி.டபிள்யூ பெரேரா

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ.ஆர் டி அப்ரூ

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியும் பெறியியலாளர் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார

14 வது படைப்பிரிவின் படைத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் என் ஆர் லமாஹேவகே

பாதுகாப்பு அமைச்சில் இயங்கும் அரச புலனாய்வு சேவை பிரிவின் பணிப்பாளரும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.எஸ். சால்லே

68 வது படைப்பிரிவின் படைத் தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஆர்.பி.டி.யு ராஜபக்ஷ

இராணுவத் தலைமையகத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஏ.ஜே.பீரிஸ்

55 வது படைப்பிரிவின் படைத் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.பி.கே.ஏ பிலபிட்டிய

முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதியும் பொறியியலாளர் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஆர் கணேகோட

விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐ.பி. கந்தனஆராச்சி

மின் இயந்திர பொறியாளர்கள் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணியின் படைத் தளபதியுமான பிரிகேடியர் SPAIMB சமரகோண்

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் (அதிகாரப்பூர்வ), இலங்கை ராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான பிரிகேடியர் பிஏசி பெர்னாண்டோ Sport media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE